தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி..!!  இரு அவைகளும்  ஒத்திவைப்பு..!!

நாடாளுமன்றத்தில் மூன்றாவது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. 

முதல் நாள் அவை தொடங்கியவுடன் பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அரிசி, தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரி எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.

இதனால் இரு அவைகளும் முதல் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மீண்டும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மீண்டும் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நேற்றும் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாளான இன்று காலை அவை தொடங்கியது. அவை தொடங்கியது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர். 

பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவைக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.