நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்கால தடை – உச்சநீதிமன்றம்

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை அடுத்த விசாரணை தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நபிகள் நாயகம் குறித்த தனது கருத்துக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் இணைக்க வேண்டும் என்பதற்காகவும், கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு கோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அவரது மனுவை ஏற்று  டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நோட்டீஸ் அனுப்பியது.  மேலும் இடைக்கால நடவடிக்கையாக, அவரை கைது செய்ய இடைக்கால கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் எடுத்து கொள்ளப் போகிறது 

டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் ஆகிய மாநிலத்திலும் நூபுர் ஷர்மா தனது மனுவில் தாக்கல் செய்துள்ளார். விமர்சனங்களுக்குப் பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக நூபுர் ஷர்மா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.