பிரிட்டன் பிரதமர் தேர்வு..!! முன்னிலை வகிக்கும்  ரிஷி சுனக்..!

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிட்டன் பிரதமர் பதவிக்காக போட்டியிடும் ரிஷி சுனக்குக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்று ரிஷி சுனக் முன்னிலை வகித்தார். இதுவரை நடைபெற்ற வாக்கெடுப்பில் ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ரிஷி சுனக்குக்கு மொத்தமுள்ள 358 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களில் 115 பேர் ஆதரவளித்தனர். அவருக்கு அடுத்தபடியாக வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பென்னி மோர்டன்ட்டுக்கு 82 வாக்குகள் கிடைத்தன.

இதில், குறைவான வாக்குகளை பெற்ற டாம் டுகென்தாட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது பிரிட்டன் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 4-ஆக குறைந்துள்ளது. இதுவரை நடைபெற்ற அனைத்து வாக்கெடுப்புகளிலும் ரிஷி சுனக்கே முன்னிலை வகித்து வருகிறார். 

நாடு முழுவதும் உள்ள 4,400-க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடம் இதுதொடர்பான கருத்துக்கணிப்பு நடைபெற்றது. இதில் ரிஷி சுனக்குக்கு கிட்டத்தட்ட 48 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக தெரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *