தொடரும் போராட்டம்..!!  இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம்..!!

இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டிய நிலையில்  அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில்  கோட்டாபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.

மேலும் அதிபர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தார். அதற்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அடக்க அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் மக்கள் போராட்டம் தொடர்ந்து  கொண்டிருக்கிறது. இந்நிலையில், வரும் புதன்கிழமை இலங்கையின் நிரந்தர அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், அதிபர் தேர்தல் இடையூறு இல்லாமல் நடைபெற ஏதுவாக இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப் படுவதாக அதிபர் இன்று அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *