மத்திய பிரதேச பேருந்து விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி

மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தோரி இருந்து  புனே நோக்கி சென்ற பேருந்து தார் மாவட்டம் கல்காட் சஞ்சய் என்ற பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இது குறித்து , பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பேருந்து விபத்து மனவேதனை அளிக்கிறது.

என் மனம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் பக்கம் இருக்கிறது. உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.