நாளை குடியரசு தலைவர் தேர்தல்..!! தயார் நிலையில் தலைமைச் செயலகம்..!!

குடியரசு தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னை தலைமை செயலக வளாகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிகிறது.

இதைதொடர்ந்து குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி குடியரசு தலைவர் வேட்பயாளராக திரௌபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தரப்பில் யஷ்வந்த் சின்ஹா தேர்தலில் போட்டி போடுகின்றனர்.

நாளை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்குப் பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாளை காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. வருகிற 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அனைவரும் தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து வாக்களிக்கின்றனர். அவர்களின் வருகைக்காக தலைமைச் செயலக வளாகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *