பயணிகள் அதிர்ச்சி..!! இந்திய விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்..!

சமீப காலமாக இந்திய விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்படுவது வழக்கமாக மாறியுள்ளது. கடந்த 2 வாரங்களில் இது 2வது முறையாகும். ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட இந்திய விமானம் ஒன்று அவசரமாக பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

இது குறித்து இண்டியோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விமானம் ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்த நிலையில் . 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கராச்சியிலிருந்து பயணிகளை அழைத்து வர வேறொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் இருந்து துபாய் சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

138 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தின் எரிபொருள் இண்டிகேட்டர் சரியாக வேலை செய்யாததால் அது தரையிறக்கப்பட்டது. எனவே பயணிகளை அழைத்துச் செல்ல வேறு விமானம் அனுப்பப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு அந்த விமானத்தை துபாய்க்கு அனுப்ப காலம் தாழ்த்தப்பட்டது. பல மணி நேர காத்திருப்பு க்குப் பின்னர் விமானம் துபாய் புறப்பட்டுச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published.