கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை..!! பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு..!!

இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளதை பிரதமர் நரேந்திர மோடி இது நம் நாட்டின் பெருமை என ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அந்த டீவீட்டில் இந்தியா மீண்டும் வரலாறு படைத்துள்ளது. 200 கோடி தடுப்பூசி அளவை தாண்டியதற்கு அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை அளவிலும் வேகத்திலும் இணையற்றதாக மாற்ற பங்களித்தவர்களை பற்றி பெருமைப்படுகிறேன். கோவிட்டுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை இது வலுப்படுத்தி உள்ளது. இந்திய மக்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் பாதுகாப்பான உலகத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் மன உறுதியை பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2020ல் கொரோனா பரவ துவங்கியது. இதையடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. கோவாக்சின் மற்றும் கோவை ஷீல்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு 2021 ஜனவரி 16 ல் செலுத்த தொடங்கப்பட்டது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை இன்று இந்தியா படைத்தது. இந்த சாதனையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தெரிவித்தார்.