குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹாவுக்கு  ஆம் ஆத்மி ஆதரவு..!!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 

இதனால் ஜூலை 18ம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக யஷ்வந்த் சின்ஹா மற்றும் திரௌபதி முர்மு ஆகியோர் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர். 

குடியரசு தலைவர் தேர்தல்: 79 மனுக்கள் நிராகரிப்பு

இந்த நிலையில் டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஆலோசனையில் ஈடுபட்டது. 

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.