இலவச பொருட்களை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது – பிரதமர் நரேந்திர மோடி

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் புந்தேல்கண்ட் விரைவு சாலை தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு, உத்தரபிரதேசத்தின் கான்பூருக்கு  பிரதமர் மோடி வருகை புரிந்தார்.   

அவரை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் நான்கு வழி விரைவு சாலையை திறந்து வைத்து உள்ளார். 

அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, 2 விஷயங்கள் சரி செய்யப்பட்டு விட்டால், பின்னர் அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் அந்த மாநிலம் போராட முடியும் என நான் அறிவேன் என்று கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு, இணைப்பு ஆகிய இரண்டையும் நாங்கள் மேம்படுத்தி உள்ளோம். இந்த விரைவு சாலையானது, தொடர்ச்சியான இணைப்பு மற்றும் அதனால் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த பகுதியில் ஏற்பட உறுதி செய்யும். இனி வரும் காலத்தில் இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக  இருக்கும்.

மேலும் அவர் பேசுகையில் ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் ஆபத்து நிறைந்தது. நாட்டின் அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த எண்ணங்களை நாம் வீழ்த்த வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.