உக்ரைன் – ரஷ்யா போர்:  ரஷ்யா நடத்திய தாக்குதலில் மேலும்  23 பேர் உயிரிழந்தனர்..!!

உக்ரைன் மீது  ரஷ்யா நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்த நிலையில் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக கீவ், கார்கிவ் போன்ற முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்கள் முக்கிய நகரங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் பல லட்சம் மக்கள் வசித்து வந்த வின்னிட்சியா பகுதியில் ரஷ்யா நேற்று முன் தினம் இரவு திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்குள்ள மருத்துவமனை, கலாச்சார மையம் தரைமட்டமானது உக்ரைன் தொிவித்துள்ளது. 

Ukraine war: 23 killed in Russian rocket attack on Vinnytsia - BBC News

இதில் 3 குழந்தைகள் உட்பட 23 போ உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 4 வயதான சிறப்பு குழந்தை ஒன்று உயிரிழந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை போர் குற்றம் என அந்த நாடுகள் கண்டித்துள்ளன. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரஷ்ய மக்கள் வசிக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தவில்லை என தெரிவித்துள்ளது. உக்ரைன் படைகள், ஆயுதங்கள் வாங்குவதற்கு வெளிநாடுகளுடன் கூட்டம் நடத்தி வந்த கட்டிடத்தின் மீதுதான் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தொிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *