அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை என்ன செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி

நாட்டில் வேலைவாய்ப்பின்மை கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்காகும் விட்டது என எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 

அதில் நாட்டில் வேலைவாய்ப்பின்மையின் அளவை வெளிப்படுத்தும் அமைப்பின் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2017-18 நிதியாண்டில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 21 சதவீதமாக இருந்துள்ளது. 

ஆனால் 2018-19ல் 30 சதவீதமாகவும், 2019-2020 ல் 37 சதவீதமாகவும், 2020-21 ல் 39 சதவீதமாகவும், 2021-22 ல் 42 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் பிரதமர் மோடிக்கு கேள்வி ஆனால் இப்ப என்னானது  என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருப்பதையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.