இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி..!! ராஜபக்சாக்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை..!!

மகிந்த ராஜபக்ச, மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. ஜூலை 28 வரை இருவரும் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரு ராஜபக்சேக்களும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்பு உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில மாதமாக போராட்டம் வெடித்து வருகிறது இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடினார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இமெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கோத்தபய ராஜபக்சே சட்டபூர்வமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கூறினார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் மகிந்த ராஜபக்ச, மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.