இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க..!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு  சில மாதமாக போராட்டம் வெடித்து வருகிறது 

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடினார். இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இமெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கோத்தபய ராஜபக்சே சட்டபூர்வமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கூறினார். 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக பதவி ஏற்றுள்ளார்.  இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை தலைமை நீதிபதி முன்பாக அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

மேலும் இலங்கையின் புதிய அதிபர் தேர்வு வருகிற 20 ஆம் தேதி நடக்க பெரும் என கூறப்படுகிறது. இலங்கை அதிபர் ரணில் பதவியேற்புக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…