பதவியை ராஜினாமா செய்த அதிபர் கோத்தபய ராஜபக்சே..!! 

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இமெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கோத்தபய ராஜபக்சே சட்டபூர்வமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இன்னும் 7 நாட்களில் முறைப்படி புதிய அதிபர் நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார். 

இலங்கையில் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் இலங்கையில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு சென்றார். அங்கும் அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  அவர் தனி விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

ஏற்கனவே கடந்த மே மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்ஷ வெளிநாடு தப்பிச் சென்று விட்டு பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

அதிபர் கோத்தபய ராஜினாமா செய்த நிலையில் தான்  போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினர். கோத்தாபய ராஜபக்சவை அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அது நடந்துள்ளதால் நாங்கள் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறுகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் மகன்கள் எனப் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.