உலகில் நிலவும் பசியைப் போக்க இந்தியா தயாராக உள்ளது- நிர்மலா சீதாராமன்

உலகில் நிலவும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பசியைப் போக்க இந்தியா தயாராக உள்ளது. அதற்கு உணவு தானியங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய உலக வர்த்தக அமைப்பு அனுமதி அளிக்க வேண்டும் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்கள் கலந்து கொள்ளும் உணவு பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி, எந்த ஒரு நாடும் தனது பொது கிடங்கில் மானிய விலையில் வாங்கி வைத்திருக்கும் உணவு தானியங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை என கூறியது.

இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறு விவசாயிகளின் தேவைக்காக எங்களிடம் உணவு தானியங்கள் உள்ளன. நாங்கள் உணவு தானியங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளோம்.

ரஷ்யா-உக்ரைன் போரினால் உலகின் பல நாடுகளும் உணவு பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் உலக உணவு திட்டத்தின் கீழ் உள்ளூரில் நிலவும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.