அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் முதல் மனைவி காலமானார்..!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மேரி டிரம்ப் காலமானார். முன்னாள் அமெரிக்க அதிபரும், தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா மேரி டிரம்ப். இந்த நிலையில் மனைவி இவானா ட்ரம்ப் இறந்துவிட்டதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நியூயார்க் சிட்டியில் உள்ள தனது இல்லத்தில் இவானா காலமானார். அவர் ஓர் அற்புதமான, அழகான பெண். அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வாழ்க்கையை அவர் வாழ்ந்துள்ளார்.

நாங்கள் அனைவரும் அவரைப் பற்றி பெருமைப்பட்டதை போல இவானா தனது பிள்ளைகள் பற்றி மிகவும் பெருமைப்பட்டார். இவானாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.முன்னாள் மாடலான இவானா, சிறந்த தொழிலதிபராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரது நிறுவனத்தைச் சார்ந்த ஆடைகள், நகைகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலம். சில புத்தகங்களையும் இவானா எழுதியிருக்கிறார். மேலும் இவர்க்கு இவான்கா ட்ரம்ப், ஜூனியர் டிரம்ப், எரிக் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவானாவின் திடீர் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின் அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.