உக்ரைன் – ரஷ்யா போர்: மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தும் உக்ரைன்..!!

உக்ரைன் – ரஷ்யா போர் பல மாதமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷ்யா தன் படை மற்றும் ஆயுதங்களை குவித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் நோவா கஹ்வா நகரை ரஷ்யா ஆக்கிரமித்தது. இந்நிலையில் உக்ரைன் படை, அந்த ஆயுத கிடங்கை நோக்கி ராக்கெட் தாக்குதல் மேற்கொண்டு உள்ளது. 

இந்நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து பாதுகாப்பாக தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா, துருக்கி உக்ரேன் போன்ற நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யா மேற்கொண்ட போருக்கு பின் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு உக்ரைன் போராடிக் கொண்டிருக்கிறது. தெற்கு கடற்கரை பகுதியில், போர் காரணமாக துறைமுகங்கள் முடக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் தானியங்களை திருடி ரஷ்யா தங்கள் நட்பு நாடுகளுக்கு விற்பதாக உக்ரைன் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இதனை ரஷ்யா மறுத்து வருகிறது.  இந்நிலையில் தானியங்கள் பிரச்சனை குறித்து தீர்வு காண்பது தான் உலக நாடுகளுக்கு தேவை என்று ஐநா பொதுச் செயலாளர் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.