இலங்கை மீண்டும் அவசர நிலை பிரகடனம்..!!

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதையடுத்து, இலங்கை முழுவதும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13 ஆம் தேதி தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில் 

தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறினார்.  ராஜபக்சே, அவரது மனைவி  மாலத்தீவுகளின் தலைநகரான மாலே நகருக்கு இலங்கை விமானப்படை விமானத்தில் புறப்பட்டுச் சென்று உள்ளனர்.  

ராஜபக்சே தனது குடும்பத்தினர் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வரை அதிபர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என கூறப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சேவுக்கு அகதியாக பாதுகாப்பு வழங்கக் கூடாது என்கிற எதிர்ப்பு குரல்கள் மாலத்தீவில் வலுத்துள்ளது.

இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.