உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி..!!

நாளை 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. காணொலி காட்சி மூலம் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் உச்சி மாநாடு மூலம் நாளை  கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகளில்  உருவாக்கப்பட்டுள்ள அமைப்பானது, நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீட்டினை ஊக்கப்படுத்தும் திட்டங்களை இதில் உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது. 

Quad Summit Leaders Participation- Dinamani

அதன்படி இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு காணொளி காட்சி வழியாக நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் வர்த்தகம், முதலீடுகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், பிற பொதுவான விவகாரங்கள் குறித்து விவாதிப்பவர்கள் என கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…