காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – பரூக் அப்துல்லா

காஷ்மீர் விவகாரம் முடிவுக்கு வர பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பரூக் அப்துல்லா கடந்த சில வாரமாக நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது உண்மையில் யார் கொலைகாரர் யார் பாதுகாவலர் என்பதே தெரியாத நிலை காஷ்மீரில் நிலவுவதாக கூறுகிறது.
இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமானால், இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஃபரூக் அப்துல்லா கூறினார். மக்களின் மனங்களை வெல்லாத வரை காஷ்மீரில் படுகொலைகள் நிற்காது என்றார்.
இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, இதுபோன்ற ஒரு நிலை இந்தியாவுக்கு வராமல் இருக்க வேண்டும் என கூறினார். இதுபோன்ற ஒரு நிலை இந்தியாவுக்கு வருமா என்ற கேள்விக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.