#BREAKING தொடரும் கனமழை… இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை,கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.
அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர் தேவாலா, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருதால் உதகை, கூடலூர் பந்தலூர், குந்தா உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் எஸ் பி அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.