வசமாக சிக்கிய சில்வண்டு..!! ஆசை காட்டி மோசம் செய்த பாஜக நிர்வாகி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் சேர்ந்த ஸ்ரீகாந்த் தேஷ்முக் என்ற பாஜக மாவட்ட நிர்வாகி வேலை வாங்கித் தருவதாக கூறி 32 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ அந்த பெண்ணின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இரண்டு தினங்களுக்கு முன் நிர்மலா யாதவ் பாஜக நிர்வாகி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் லைவ் வீடியோ மூலம் பேசி உள்ளார். 

இந்த வீடியோ வைரலாகி மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ஸ்ரீகாந்த் தேஷ்முக் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதற்கு விளக்கம் அளித்த ஸ்ரீகாந்த் தேஷ்முக் நிர்மலா யாதவுக்கு தனக்கு ஏற்கனவே தொடர்பு இருந்தது. இந்தப் பெண் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார் என்று போலீசில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த சர்ச்சை குறித்து புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீகாந்த் யாதவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.