யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பதிலடி கொடுத்த அசாதுதின் ஓவைசி..!!

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை சார்பில் உலக மக்கள் தொகை தொடர்பான அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஒரு கருத்து தெரிவித்து இருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்தடை சாதனங்களை முஸ்லிம்கள்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய போது நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கூறினார்.
இந்த சூழலில் யோகி ஆதித்யநாத் கருத்து குறித்து ஒவைசி கூறுகையில் முஸ்லிம்களே அதிக அளவில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று பதிலடி தெரிவித்துள்ளார்.