கேரளாவில் பதற்றம்..!! ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டம் பையனூர் ஆர் எஸ் எஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலையில் பையனூர் ஆர் எஸ் எஸ் அலுவலகம் மீது திடீரென்று வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அந்த அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணையில் அதிகாலை 1.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வெடிகுண்டை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் உள்ளே வீசி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் இடையே வன்முறை நடக்கும் நிலையில் தற்போது ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுபற்றி பாஜகவை சேர்ந்த டாம் வட்காம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…