வெளிநாடு சென்ற ராகுல் காந்தி..!! விமர்சனம் செய்யும் பாஜக..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக ஐரோப்பா செல்லப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதால் பாஜகவால் அடிக்கடி விமர்சனம் தெரிவிக்கும்  நிலையில் ராகுல் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். 

இம்முறை ஐரோப்பிய நாடுகளுக்கு தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய கூட்டங்களை தவறவிட போகிறார்  என கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது காங்கிரஸ். இதை தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கப்படும் காங்கிரஸ் யுனைட் இந்தியா பிரச்சாரத்துக்கான ஆலோசனை கூட்டம் 

நடக்கவுள்ளது. முக்கியமான இந்த இரு கூட்டங்களையும் ராகுல் தவறவிடவுள்ளார் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேநேரம் என்ன காரணத்துக்காக ராகுல் ஐரோப்பா சென்றுள்ளார் என்பது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.