ஜார்க்கண்ட்டில் தியோகர் விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி..!!

ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் ₹ 16,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்ததால், தியோகரில் பண்டிகை சூழல் காணப்பட்டது. அந்த பகுதியில் ஒரு  லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றி வரவேற்றனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி  11.5 கி மீ நீளமுள்ள சாலை நிகழ்ச்சிக்கு பாஜக தொண்டர்கள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை வைத்து உள்ளனர். காவல்துறை கூறுகையில் நடைபெறும் ரோட் ஷோவில் லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடுவார்கள் அல்லது பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். முழு ரோட் ஷோவையும் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரி மேலும் கூறினார்.

இந்த பயணத்தின் போது ​​12 ஜோதிர்லிங்கங்கள் ஒன்றான பாபா கோவில் பிரதமர் தரிசனம் செய்வார் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க பக்தர்கள் மாலை 3.30 மணிக்கு மேல் மட்டுமே கோயிலுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.