தேசிய சின்னம் குறித்து எழும் சர்ச்சை..!! விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகள்..!!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையின்  அமைக்கப்பட்டுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.  

இந்தியாவின் தேசிய சின்னமான நான்முக சிங்கம், புதிய நாடாளுமன்றத்தின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட தேசிய சின்னத்தை தாங்கி பிடிக்க 6,500 கிலோ எடையில் 4 புறமும் எஃகு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரமாண்ட தேசிய சின்னமானது மாற்றியமைக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது தேசிய சின்னமான அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது உண்மையான சிங்கம்  அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றன. நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள மோடியின் உடைய சிங்கங்கள், உறுமிக் கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவில்லாமல் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிற்பி சுனில் தியோர் நாங்கள் சரியான விகிதாச்சாரத்தில் மனதில் வைக்க முயற்சித்தோம். அசல் அமைப்பு 3 முதல் 3.5 அடி உயரம் கொண்டது ஆனால் புதியது 21.3 அடி உயரம் என்று அவர் கூறினார்.

வெவ்வேறு கோணங்கள் படி வெளிப்பாட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதாக கூறிய டியோர், சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் புகைப்படங்கள் கீழே இருந்து எடுக்கப்பட்டவை என்றும், அதனால் வெளிப்பாடுகள் ஆக்ரோஷமாகவும், வாய் பெரிதாகவும் தோன்றியதாகவும் கூறி உள்ளார் .

Leave a Reply

Your email address will not be published.