மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்..!! உயிரிழந்த தம்பியுடன் சாலையோரம் அமர்ந்த 8 வயது சிறுவன்..!!

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ள தனது 2 வயது தம்பியுடன் சாலையோரம் அமர்ந்திருக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த 2 வயது சிறுவனுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீட்டில் கை மருந்துகள் கொடுத்து பார்த்தும் சரியாகாத நிலையில் தொடர்ந்து சிறுவன் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் உடனே சிறுவனை மொரீனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

மருத்துவமனையில் அதிகாரிகள் ஆம்புலன்சிற்கு பணம் கேட்டதாகவும், தம்மிடம் பணம் எதுவும் இல்லாததால் ஆம்புலன்ஸ் தர மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் சிறுவனின் உடலுடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து சாலையில் அமர்ந்தார். இதை கண்ட பொதுமக்கள்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்.  இதுகுறித்து மொரீனா மாவட்ட மருத்துவமனையில் மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதில் மருத்துவர் நாங்கள் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.