தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்தார். மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் டாடா நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டப்பட்டு வருகிறது.
ரூ.971 கோடி மதிப்பில் 62000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த சின்னம் வெண்கலத்தால் ஆனது மற்றும் 6.5 மீ உயரமும் ,4.4 மீட்டர் அகலமும் கொண்டது. நில அதிர்வு ஏற்பட்டாலும், அதை தாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் இந்த கட்டிடம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் பகுதி இன்று 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தாலான தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.