தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவம்..!! தென் ஆப்பிரிக்காவில் மேலும் 15 பேர் பலி..!!

உலகில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் தென் ஆப்பிரிக்கா  முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வரிசையில் தென் ஆப்ரிக்காவில்  ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள சோவெட்டோ பகுதியில் நேற்று முன்தினம் புகுந்த மர்ம நபர்கள் சிலர், துப்பாக்கியால் சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை  மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் என்ற முழு விவரம் தெரியவில்லைஇது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த துப்பாக்கி சூட்டிக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல்  தென்னாப்பிரிக்காவின் ஈஸ்ட் லண்டன் பகுதியில் 2 வாரங்களுக்கு முன்பு 21 இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். 

ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வன்முறையால் கொல்லப்படுவதாக புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தகவல் தந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.