இலங்கை அதிபர் ஓட்டம்..!! அதிபர் கோத்தபய வீட்டில் எடுக்கப்பட்ட பல லட்சம் ரூபாய்..!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் கிடைத்த பல லட்சம் பணம் இருந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து மக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். 

நேற்று இலங்கையில் அதிபர் அலுவலகம் மற்றும் வீட்டை போராட்டகாரர்கள் கைப்பற்றினார்கள். நேற்று  இலங்கை அதிபர் வீட்டிற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த போராட்டக்காரர்கள் வருவது தெரிந்து அதிபர் அங்கிருந்து வெளியேறினர். 

கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு நேற்று சென்ற போராட்டக்காரர்கள் அவரின் வீட்டு அலமாரியில் இருந்து பணக்கட்டுகளை கைப்பற்றினார்கள். கோத்தபய ராஜபக்சேவின் வீட்டு படுக்கை அறையில் இருந்த லாக்கரை உடைத்து அதிலிருந்த பணத்தை கைப்பற்றினார்கள். இதில் மொத்தம் இலங்கை மதிப்பில் ஒரு கோடியே எழுபத்து எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இருந்துள்ளது. ஆனால் இதை போராட்டக்காரர்கள் அபகரிக்கவில்லை.

மாறாக இதை அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் போராட்டக்காரர்கள் கொடுத்தனர். இந்த நிலையில் இந்த பணத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கும்படி கொழும்பை சேர்ந்த சர்ச்சைக்குரிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பதிவில் ஏற்ற வேண்டாம். 

அதிபர் ஓடிவிட்ட நிலையில் அமைச்சர் ஒருவர் அவரின் வீட்டில் இருந்த பணத்தை கைப்பற்ற முயன்றதும், அதற்கு சர்ச்சைக்குரிய போலீஸ் உறுதுணையாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…