மத உணர்வை புண்படுத்தியதாக சிவன் வேடமிட்ட நபர் கைது..!!

அசாம் மாநிலத்தில் பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கூறி மத்திய அரசுக்கு எதிராக வீதி நாடகத்தில் சிவன் வேடமிட்டு போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போராட்டத்தின் போது பிரிஞ்சி போரா சிவன் வேடமிட்டு இருந்தார். கரிஷ்மா பார்வதி போன்று உடை அணிந்திருந்தார். இவர்கள் 2 பேரும் புல்லட்டில் வலம் வந்தனர். இதனை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியின் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. ஏழை மக்களின் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்காமல் பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார். 

இதையடுத்து அவர்கள் இந்து தெய்வங்களின் வேடமணிந்து மத உணர்வை புண்படுத்தியதாக நாகனில் உள்ள சாதர் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரிஞ்சி போராவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.