ஜெர்மன் பத்திரிகையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை..!! உக்ரைனின் நடந்தது என்ன..?

உக்ரேன் படைகள் பொதுமக்களுக்கு எதிராக செய்த குற்றங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டதற்காக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தேன் என ஜெர்மன் பத்திரிகையாளர் அலினா லிப் என்பவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு டான்ஸ் பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக உக்ரேனிய படைகள் செய்த குற்றங்கள் குறித்து அறிக்கை செய்ததற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தேன் என்றார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் அரசாங்கத்தால் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவதாகவும், மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதித்துறை அதிகாரிகளிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. மேலும் இது குறித்து ஜெர்மனி நீதிமன்ற விசாரணைகள் நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த செயல் அனைத்தும் உண்மைக்கு  புறம்பாக  எதுவும் சித்தரிக்கவில்லை என்று விளக்கினார். நாட்டில் நடக்கும் செயல்களை மட்டும் தான் பார்த்ததை படம் எடுத்துள்ளேன் , பொய்யான தகவல்களை பரப்ப வில்லை என்றார்.  அரசாங்கம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஜெர்மன் நீதிமன்றங்களில் எதிராக வழக்கு தாக்கல் செய்வேன்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆதரிப்பதாக ஜெர்மன் அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டு  அரசியலமைப்பின் 140 வது பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது பண அபராதத்தை எதிர்கொள்ள நேரிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *