பக்ரீத் பண்டிகை: வாழ்த்து தெரிவித்த முக்கிய தலைவர்கள்..!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று  பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில், ஈத் முபாரக் ஈதுல் அதா நல்வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கு உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கும் என்று  ட்வீட் செய்துள்ளார். 

அவரை தொடர்ந்து  ராகுல் காந்தி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “ஈத் முபாரக்! ஈத்-அல்-அதாவின் புனிதமான தருணம் ஒற்றுமை உணர்வை கொண்டுவரட்டும், அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் என்று ட்வீட் செய்துள்ளார். 

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

அட்டாரி-வாகா எல்லையில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் எல்லைப் பாதுகாப்புப் படையினர்  இனிப்புகளை பரிமாறி கொண்டாடி உள்ளனர். மேலும் குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாய மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்

அப்போது இயற்கை விவசாயம் செய்தால் அது இயற்கை சுற்றுச் சூழலுக்கு சேவை செய்வதாக அர்த்தம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இயற்கை விவசாயம் செய்யும் போது பூமித்தாய்க்கு சேவை செய்கிறீர்கள் என்றும் மண்ணின் தரத்தை பாதுகாக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.