உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி..!! ஜெர்மனியில் அதிகரிக்கும் கேஸ் தட்டுப்பாடு..!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யாவை கண்டித்து ரஷ்யா மீது பொருளாதார தடை மற்றும் இறக்குமதிக்கான தடையை விதித்திருந்தது.

இந்நிலையில் பொருளாதார தடையால் ரஷ்யாவில் இருந்து கேஸ் இறக்குமதி குறைந்துள்ளதால் ஜெர்மனியில் கேஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து செப்டம்பர் மாதம் தொடங்கும் இலையுதிர் காலத்தை கருத்தில்கொண்டு வீடுகளில் இயக்கப்படும் ஹீட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் ஐந்து லட்சம் அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு வைத்திருக்கும் வானோவியா நிறுவனம் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. ஹீட்டர்களின் வெப்பநிலையை 17 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த கட்டுப்பாடு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஹீட்டர்களுக்கு 55% வரை கேஸ் பயன்படுத்தப்படும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளால் 8 சதவீதம் விலை குறையும் என்று வினோவியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து கேஸ் இறக்குமதி குறைந்ததால் ஜெர்மனியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஹீட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஜெர்மனி  மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.