இலங்கையில் பதற்றம்..!! அவசர கூட்டத்தில் கொண்டு வந்த முடிவுகள் என்ன..!!

இலங்கை மிக மோசமான நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இலங்கையில் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிரடியாக அதிபரின் மாளிகைக்குள் நுழைந்து வீட்டை கைப்பற்றியுள்ளனர். 

மாளிகையில் இருந்து தப்பிய அதிபர் கோட்டபய ராஜபக்சே கப்பலில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால், கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சபாநாயகருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  தற்போது இருக்கும் அரசியல் நிலை தொடர்பில் ஆலோசனை செய்ய இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மதிப்பளிப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.