அதிபர் ராஜபக்சே பதவி விலக வேண்டும்..!! இலங்கையில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்..!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கொழும்பில் உள்ள அதிபர் இல்லம் முன்பு  ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் முடங்கியுள்ளனர். 

பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி ஏற்பட்ட நிலையில்  இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அவருக்கு பதில்  ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இருந்தபோதிலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை குறைக்க சுமார் அதிகளவு பாதுகாப்புப் படையினர் கொழும்புவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை போலீசார் பிறப்பித்து உள்ளனர். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்திற்கு அருகில் உள்ள ராணுவத் தடுப்புகளை மக்கள் இரவு உடைத்து உள்ளே புக முற்பட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து அவர்கள் விரட்டினர். இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் இதுவரை நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர் என கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…