நூபுர் சர்மாவின் கருத்துக்கு இணைய வழி போரைத் தொடங்கிய ஹேக்கர்கள்..!!

நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மலேசியா, இந்தோனேசியா ஹேக்கர்கள் இந்தியாவை நோக்கி இணைய வழி போரைத் தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியா மற்றும் ஹேக் டிவிஸ்ட் இந்தோனேசியா என்ற இரு குழுக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.ஞான வாபி மசூதி விவகாரம் குறித்து பிரைம் டைம் விவாதத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா நபிகள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக உலகம் முழுவதும் அவருக்கு பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.மேலும் பாஜகவில் இருந்து நூபுர் ஷர்மா நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டிக்கும் வகையில் தற்போது மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த இரண்டு ஹேக்கர் குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அகமதாபாத் சைபர் கிரைம் டிசிபி அமித் வாசவா கூறுகையில் நூபுர் சர்மாவின் தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் பரப்பியுள்ளது என்று கூறினார். இதனால் 2,000க்கும் மேலான இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் வாசவா கூறினார். ஹேக் செய்யப்பட்ட இணையதளங்களில் “உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்’ என்று ஹக்கர்கள் ஆடியோ மற்றும் செய்தி வடிவில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அகமதாபாத் சைபர் கிரைம், மலேசியா மற்றும் இந்தோனேசியா அரசாங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.