மேக வெடிப்பு மழை..!! அமர்நாத்தில் சிக்கிய பக்தர்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

அமர்நாத் குகை அருகே ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த மழை வெள்ளத்தில் சிக்கிய பக்கதர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனா காலகட்டம் முடித்து இந்த ஆண்டு முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து  பக்தர்கள் அமர்நாத் யாத்திரை தொடங்கிய  சில நாட்களாக அமர்நாத் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று அமர்நாத் திடீரென்று மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அமர்நாத் குகைக்கு மலை ஏறிக் கொண்டிருந்த பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40 பேர் மாயமாகி உள்ளதாகவும், 50 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசுகையில் மக்களின் உயிரைக் காப்பதே எங்களின் முதல் கடமை. மேலும், காயமடைந்த பக்தர்கள் அனைவரும் குணமடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.அமர்நாத் குகைக் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.