எச்சரிக்கும் ஐ நா..!!  தடுமாறும் இலங்கை..!! உலக நாடுகளுக்கு இது பொருந்துமா..!!

உலக நாடுகள் இலங்கை போன்ற கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஐ நா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐ நா வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் மக்கள் மிகுந்த சோகமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இது போன்ற நெருக்கடியை ஒரு நாடு சந்திக்கும் போது அந்த நாட்டுக்கு பிற நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை அரசு வாங்கிய கடனுக்கான வட்டியை கடந்த மாதம் செலுத்தாது குறித்து குறிப்பிட்ட அச்சிம் ஸ்டெய்னர், இலங்கையின் இன்றைய நிலை ஏற்கனவே நெருக்கடியைச் சந்தித்து வரும் பல நாடுகளுக்கும் எச்சரிக்கை என கூறியுள்ளார்.

போர்க்குணம் மிக்க இளைஞர் குழுக்களால் பேராபத்து!! ரணில் வெளிப்படை - ஐபிசி  தமிழ்

ஒரு நாடு கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், அதனால் இறக்குமதி செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஐ நா சபை. நாட்டின் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான பெட்ரோல், டீசல், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் போனால் அந்த நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு மீளும் என கேள்வி எழுப்பினார்.

பண வீக்க விகிதம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையிலான கால கட்டத்தில் மட்டும் 7.10 கோடி பேர் புதிதாக ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா. வளர்ச்சித் திட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.