முகமது ஜுபைருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

உத்தரப் பிரதேச காவல்துறை பதிவு செய்த வழக்கில் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு உச்ச நீதிமன்றம்  இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் குற்றச்சாட்டில் கைது செய்த டெல்லி காவல்துறை தாக்கல் செய்த இந்த வழக்கில் வழக்கில் தொடர்ந்து காவலில் இருந்தார். 

உத்தரபிரதேசத்தின் சிதாபூரில் உள்ள நீதிமன்றம், உத்தரப் பிரதேச வழக்கில் தனது ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரபிரதேச அரசு மற்றும் காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய போது, முகமது ஜுபைருக்கு  நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக கூறினார்.

இடைக்கால ஜாமீன் உத்தரவின் விதிமுறைகளின்படி, பெங்களூரு அல்லது வேறு எங்கும் ஜுபைர் ட்வீட் போடவோ அல்லது ஆதாரங்களை சேதப்படுத்த கூடாது. இடைக்கால உத்தரவு வேறு எந்த எஃப்.ஐ.ஆர். விசாரணைக்கு தடை விதிக்கவோ அல்லது எந்த வகையிலும் இடையூறு செய்யவோ இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கம் கூறியுள்ளது.

உத்தரபிரதேச காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இடைக்கால உத்தரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார், ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.

இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதங்களின் போது, ​​ஜுபைரின் வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளியிட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் விஷமத்தனமான மொழியை அம்பலப்படுத்திய மதச்சார்பற்ற ட்வீட்டரை சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published.