ஜப்பானில் பரபரப்பு..!! முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு..!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ துப்பாக்கியால் சுடப்பட்ட வீடியோ  வெளியாகி உள்ளது.

துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஷின் சோ அபே உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அபே என்று நாரா என்ற மேற்கு ஜப்பான் பகுதியில் அவர் மக்கள் முன் உரையாடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூடு நடந்தை தொடர்ந்து உடல் முழுக்க ரத்தத்தோடு அபே சுருண்டு விழுந்துள்ளார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ரத்தம் வெளியேறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். துப்பாக்கியால் சுட்டதாக கருதப்படும் நபரை போலீசார் செய்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவித்தன.

ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக 2020ல் அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இவர் பிரதமர் பதவியை அலங்கரித்த வந்தார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…