மியான்மர் நாட்டின் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொலை..!

மியான்மர் நாட்டின் தமிழர்கள் இரண்டு பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகன் மற்றும் அய்யனார் என்ற இருவரும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மொரே என்ற இடத்தில் இருந்து மியான்மருக்கு சென்றுள்ளார்.

அப்போது தாமு என்ற இடத்தில் அவர்கள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டு கொலை செய்து உள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மோகனுக்கு சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.

Two Tamil youths from Manipur Moreh shot dead in Myanmar Tamu-मणिपुर के  मोरेह के दो तमिल युवकों की म्यांमार के तामू में गोली मारकर हत्या | World  Hindi News

மேலும் மியான்மரில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட மோகன், அய்யனார் ஆகியோரின் உடல்கள் தாமு நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

இது குறித்து மணிப்பூர் காவல்துறையினர் கூறுகையில் இருவரும் என்ன காரணங்களுக்காக மியான்மர் எல்லைக்கு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். 

மியான்மரில் ராணுவ ஆட்சியை கைப்பற்றி உள்ளதை அடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அந்த நாட்டுடனான சர்வதேச எல்லை மூடப்பட்டது என்பது குறிப்பித்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…