பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!!  

பீகார் முன்னாள் முதலமைச்சர் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயர் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாட்னாவில் உள்ள வீட்டின் மாடிப்படிகளில் இருந்து விழுந்ததில் வலது கை தோள்பட்டை மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாட்னாவில் உள்ள பரஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள லாலு பிரசாத் யாதவ் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம், பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ்-க்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக அவரை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல போவதாக தகவல்  வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…