இத்தாலியில் கடும் வறட்சி..!! அவசர நிலையை பிறப்பித்த இத்தாலி அரசு..!

இத்தாலியில் கடும் வறட்சி காரணமாக 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாலி சுற்றியுள்ள 5 மாகாணங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியால் நாட்டின் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 30%க்கும் அதிகமான விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி தடுக்கும் பொருட்டு வடக்கில் உள்ள லோம்பார்டி, எமிலியா, ரோமக்னா, பிரியூலி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ  ஆகிய  ஐந்து மாகாணங்களில் இத்தாலி அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.

Italy imposes state of emergency because of drought - Newsnpr

வறட்சி கடுமையாக ஏற்பட்டுள்ள 5 மாகாணங்களில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க சுமார் 36.5 மில்லியன் யூரோவை இத்தாலி அரசு ஒதுக்கி உள்ளது. வறட்சியை கட்டுப்படுத்தும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என  இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மேலும் வறட்சி நிலைமையை சமாளிக்க சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றனர். அதி தீவிர மழை, கடும் வறட்சி, புயல், வெள்ளம் போன்றவற்றால் மனிதர்களும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் உள்ளது என்ற எச்சரிக்கையை எழுந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *