நுபுர் சர்மா வழக்கு..!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் அதிகாரிகள் கடிதம்..!!

இஸ்லாம் குறித்து விமர்சித்த பாஜக பிரமுகர் நூபுர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து கடுமையாக விமர்சிக்க பட்டு வரும் நிலையில், நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டார் என்று முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் என 117 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும் கடிதம் எழுதி உள்ளனர்.

நுபுர் சர்மா மீதான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், பார் திவாலா அமர்வு, இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக கருத்து தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நபிகள் விவகாரம்-பாஜக மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவால் நாடு எரிகிறது-  மன்னிப்பு கேளுங்க- உச்சநீதிமன்றம் | Prohpet Row: Nupur Sharma should  apologise to the nation, says ...

இந்த விவகாரத்துக்கு மூலகாரணமாக இருந்த கியான்வாபி மசூதியில் உள்ள லிங்கம் குறித்து இஸ்லாமியர்கள் கூறிய கருத்தை செவிமடுக்காமல், நூபுர் சர்மா மீது மட்டும் தேவையற்ற கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகளின் ஒருதலைப்பட்சமான கருத்து விவாத பொருளாக உள்ளது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், பார்திவாலா அமர்வின் கருத்துக்கு எதிராக, 15 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 77 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் என  117 முன்னாள் அதிகாரிகள், நூபுர் சர்மா விவகாரத்தில் நீதிபதிகள், லட்சுமணன் கோட்டை தாண்டி விட்டார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.