சிங்கப்பூர் அதிபருக்கு கொரோனா..!! விரைவில் குணமடைந்து வருவேன் என நம்பிக்கை தெரிவித்தார்..!!

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் மற்றும் அமைச்சர் எட்வின் டோங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 67 வயதான ஹலிமா இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நான் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு தொற்று - அண்மைய நிலவரம் -  தமிழில் செய்திகள்

53 வயதான பாராளுமன்ற சபாநாயகர் டான் சுவான்- ஜின் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்திற்கு முன் கொரோனா தொற்று சோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சபாநாயகர் டான் தனது பதிவில், அறிகுறிகள் லேசாக இருக்கிறது என்றும் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும்படியும், கொரோனா தொற்றில் இருந்து பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் தப்பிப்பதற்கு தடுப்பூசி உதவுகிறது.

எனவே உங்கள் முறை வரும்போது பூஸ்டர்கள் பெறுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் டோங் , கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *