அமெரிக்காவில் பரபரப்பு..!! சுதந்திர தினத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் கடந்த மே மாதம் இரு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் 246-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிகாகோ நகரில் உள்ள ஹைலேண்ட் பூங்காவில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியை கொண்டு கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதில் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர் மேலும்  தப்பிச் சென்ற நபரை தேடி வருகின்றனர். பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் நீண்ட முடி வைத்திருந்ததாகவும் 18 முதல் 20 வயதுடைய இளைஞர் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சுதந்திர தினத்தன்று நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.