மகாராஷ்டிராவில் பலத்த மழை..!! பல இடங்களில் நிலச்சரிவு..!!

மகாராஷ்டிராவில் பல இடங்களில் நேற்று பலத்த மழை பெய்து வரும் நிலையில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை, பனுவல் மற்றும் சீயோன் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல இடங்களில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில பஸ்கள் மாற்றி விடப்பட்டது.
புறநகர் ரயில் சேவை மட்டும் மும்பையில் வழக்கம் போல் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், சுரங்க பாதைகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மும்பையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 95.81 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தானே, புனே, பீட், லடூர், ஜல்னா, பர்பானி மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு கனமழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில், சிப்லன் என்ற இடத்தில் கட்கோபர் புறநகரிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தலைமை செயலாளர் மனு குமார் ஸ்ரீவஸ்தவா உடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தினார்.